’தாலி கட்டினால் தான் ஜாமின்...’ நீதிமன்ற வளாகத்தில் கைக்குழந்தையுடன் காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!

0 1134

புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

வடுகப்பட்டியைச் சேர்ந்த அஜித்தும், அதே பகுதியைச் சேர்ந்த சத்யாவும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய அஜித், அவரை கர்ப்பமாக்கினார்.

இதில், சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவரை திருமணம் செய்துகொள்ளாமல் அஜித் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் அஜித்தை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், நீதிபதி உத்தரவின் பேரில் வழக்கறிஞர்கள் முன்னிலையில் கைக்குழந்தையுடன் வந்த சத்யாவை அஜித் திருமணம் செய்துக்கொண்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments