கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி தங்க நகைகள், பணம் கொள்ளை.!

0 753

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்தவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

புசாபூர் கிராமத்தில் இயங்கி வரும் தெலுங்கானா கிராமிய கூட்டுறவு வங்கியில் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையர்கள் அங்கிருந்த லாக்கரை வெல்டிங் கேஸ் மூலம் வெட்டி கொள்ளை அடித்துள்ளனர்.

மேலும் போகும்போது வங்கியில் பொருத்தப்பட்டிருக்கும் சி சி டிவி கேமரா ஹார்ட் டிஸ்கையும் எடுத்து சென்று விட்டதால் அவர்களை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments