குரங்கு அம்மை தொற்று நோயின் பரவும் திறன் அதிகரிப்பு.. 53 நாடுகளில் 5,322 பேர் பாதிப்பு..!

0 1107
குரங்கு அம்மை தொற்று நோயின் பரவும் திறன் அதிகரிப்பு.. 53 நாடுகளில் 5,322 பேர் பாதிப்பு..!

உலகம் முழுவதும் 53 நாடுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்புகளில் 85 சதவீதம் ஐரோப்பாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களில் அதிகரித்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

நோய் தொற்றின் அதிவேக பரவலை தடுக்க அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments