மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து ஊடுருவ முயன்ற மர்ம நபர் கைது.!
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து ஊடுருவ முயன்ற மர்ம நபர் கைது செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு இரும்புத் தடியுடன் ஒருவர் மம்தாவின் வீட்டுக்குள் பதுங்கியிருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையினர் சிறப்பு புலனாய்வு தனிப்படையை நியமித்துள்ளனர்.
பணியில் இருக்கும் பாதுகாப்பு பிரிவினர் மொபைல் போன்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
Comments