கடந்த 17 நாட்களில் 7 வது முறை.. அடுத்தடுத்து தொழில் நுட்பக் கோளாறுக்கு உள்ளாகும் ஸ்பைஸ் ஜெட் விமானம்..!

0 577

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்றில் நடுவானில் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது.

ஏற்கனவே இன்று காலை அதே நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் ஒன்று துபாய் செல்லும் வழியில் எரிபொருள் அளவை காட்டும் சமிக்ஞை விளக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கடந்த 17 நாட்களில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை சேர்ந்த விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments