வீட்டில் திருடப்பட்ட 30 சவரன் நகை, 8 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

மதுரையில் வீட்டில் திருடப்பட்ட 30 சவரன் நகை மற்றும் பணத்தை 24 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வசந்த நகரை சேர்ந்த சீனிவாச சங்கர நாராயணன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் மற்றும் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் நேற்று திருடப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், துரிதமாக செயல்பட்டு கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை 24 மணிநேரத்தில் கைது செய்து நகை மற்றும் பணத்தையும் மீட்டனர்.
Comments