பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது - உயர்நீதிமன்றம்

0 617

தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யாத இல்லங்கள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முதியோர் இல்லங்களை பதிவு செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அமல்படுத்தப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதன் விசாரணையில், முதியோர் இல்லங்களின் அன்றாட நடவடிக்கைகளை அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் குறைபாடுகளை சுட்டிக்காட்டிய பின்னரும் அதனை நிவர்த்தி செய்யாத இல்லங்களின் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments