"இவங்க பிளைட்ல தான் வருவாங்களாம்".. கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கை-3 சிறுவர்கள் உட்பட 7 வடமாநிலத்தவர்கள் கைது

0 1631

கோவைக்கு விமானத்தில் வந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு, அந்த பணத்தை வைத்துஊர் சுற்றி வந்த 3 சிறுவர்கள் உட்பட 7 வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.எஸ்.புரம் அருகே தொடர் செல்போன் பறிப்பு, வழிப்பறி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், பூ மார்க்கெட் அருகே ஒரு முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் கோவைக்கு விமானத்தில் வந்து இங்கு தங்கியிருந்து கூட்டம் நிறைந்த பகுதிகளில் சிறுவர்களை வைத்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. திருடிய பணத்துடன் சொந்த ஊர் செல்லும் இந்த கும்பல், ஆடம்பரமாக செலவழித்துவிட்டு பணம் தீர்ந்தவுடன் மீண்டும் வந்து கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments