மதுபோதையில் அரிவாளால் வெட்ட வந்த கணவனை கொலை செய்த மனைவி.!

0 1207

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே மதுபோதையில் தன்னை வெட்ட வந்த கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கொற்கை கிராமத்தை சேர்ந்த மகாதேவன், வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகாவேதன், மனைவியிடம் தகராறு செய்த நிலையில், அதனை தட்டி கேட்ட மகனை பீர் பாட்டிலால் வயிற்றை கிழித்த பிறகு மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். கணவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கிய மனைவி அவரை சரமாரியாக வெட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments