விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து பலி.!

0 1529

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஒரு வயது பெண் குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாதலக்கரை கிராமத்தை சேர்ந்த மாரித்தாயின் ஒரு வயது பெண் குழந்தை, விளையாடிக் கொண்டிருந்ததால், குழந்தையை கவனிக்காமல் அவர் வீட்டு வேலை செய்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின் வீட்டிற்குள் இருந்த குழந்தையை காணவில்லை என தேடியபோது, குளியறையில் உள்ள வாளிக்குள் குழந்தை  தலைக்குப்புற விழுந்த கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments