தகாத வார்த்தைகளால் இந்திய ரசிகர்களை திட்டிய இங்கிலாந்து ரசிகர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கி. கிரிக்கெட் வாரியம் உறுதி.!

0 1332

பர்மிங்ஹாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இனவெறியுடன் நடந்து கொண்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

எட்ஜ்பஸ்டனில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள், இந்திய ரசிகர்களிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதோடு, தகாத வார்த்தைகளாலும் திட்டினர்.

மைதானத்தில் இருந்த காவலர்களிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியர்கள் பலர் டிவிட்டரில் பதிவிட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments