வயதுமுதிர்வு மற்றும் உடல்நிலை பிரச்சினையால் பதவி விலகலா..? போப் ஆண்டவர் பதில்!

0 797

போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதவி விலகும் முடிவை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 85 வயதாகும் போப் பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நிலை பிரச்சினை காரணமாக கோடை இறுதியில் பதவி விலகலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள போப் ஆண்டவர், "பதவி விலகலை அறிவிக்கும் எண்ணம் மனதில் நுழையவே இல்லை" என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 24 முதல் 30-ந்தேதி வரை கனடாவில் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், அதற்கு பிறகு உக்ரைன் மற்றும் மாஸ்கோவிற்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் போப் பிரான்சிஸ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments