ஸ்பெயின் கிரேன் கனாரியா தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகள் மீட்பு.!

ஸ்பெயின் கிரேன் கனாரியா தீவு அருகே நடுக்கடலில் தத்தளித்த 39 அகதிகளை கடற்படையினர் மீட்டனர்.
சஹாரா பாலைவன பிரதேசத்தில் இருந்து வாழ்வாதாரம் தேடி படகு பயணம் மேற்கொண்ட பெண்கள் உள்பட 39 பேர், ஸ்பெயின் அருகே வழித்தவறி நடுக்கடலில் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து சென்று செஞ்சிலுவை சங்கம், மற்றும் கடற்படையினர், மூழ்கும் நிலையில் மரப்படகில் இருந்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். 39 பேரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
Comments