எரிபொருள் விலை உயர்வை கண்டித்து பெருவில் வேலைநிறுத்தம்.!

0 651

பெரு நாட்டில் எரிபொருள் விலை கடும் உயர்வை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் தேசிய அளவிலான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக நாட்டில் 80சதவிகிதம் அளவுக்கு போக்குவரத்து முடங்கி போனதாக பெரு ஓட்டுனர்கள் தேசிய சங்கத் தலைவர் தெரிவித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்கள் அவதிக்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments