தனியார் பேருந்தை அதிகாலையில் திருடிய 2 மர்ம நபர்கள் கைது.!

0 1320

கடலூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி பேருந்தை திருடி சென்ற நபர்கள் மதுபோதையில் பேருந்தில் ஏறிய போது ஊழியர்களால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

புதுவை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து சிதம்பரம் தில்லை காளி கோவில் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டது. சிசிடிவியை சோதனை செய்ததில் அதிகாலை 2 மணி அளவில் 2பேர் அந்தப் பேருந்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதற்கிடையில் காணாமல் போன அந்த பேருந்து கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி அருகே புதுச்சேரி எல்லையில் நிற்பதாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து  அங்கு சென்ற கல்லூரி ஊழியர்கள் மதுபோதையில் பேருந்தில் ஏறி இயக்க முயன்ற 2பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments