நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா கூட்டணி அரசு வெற்றி.!

0 904

மகாராஷ்டிரச் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாஜக - சிவசேனா கூட்டணி அரசு வெற்றிபெற்றுள்ளது.

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரச் சட்டப்பேரவையில் ஓரிடம் காலியாக உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு 144 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 164 பேரும் எதிராக 99 பேரும் வாக்களித்தனர்.

நேற்றுவரை உத்தவ் தாக்கரே அணியில் இருந்த இருவர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசை ஆதரித்தனர். அதேநேரத்தில் காங்கிரசின் பத்து உறுப்பினர்கள் உட்பட 22 பேர் சட்டப்பேரவைக்கு வரவில்லை.

பாஜகவின் 105 உறுப்பினர்களும், சிவசேனாவின் 41 உறுப்பினர்களும், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் 18 உறுப்பினர்களும் அரசை ஆதரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments