உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்யுமாறு சபாநாயகரிடம் மனு.!

உத்தவ் தாக்கரே தரப்பைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்யுமாறு, ஏக்நாத் ஷிண்டே தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் தனது உத்தரவை மீறி, வாக்களித்த அவர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கொறடா பரத் கோகவாலே சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்துள்ளார்.
இதை உறுதி செய்துள்ள சபாநாயகர் அலுவலகம், 16 பேருக்கும் சஸ்பெண்ட் நோட்டீஸ் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே ஏக்நாத் ஷிண்டேவை பேரவையில் சிவசேனா கட்சித் தலைவராக அங்கீகரித்தும், உத்தவ் தாக்கரே தரப்பின் அஜய் சவுத்ரியை நிராகரித்தும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
Comments