லீவு போட்டுவிட்டு ஏர் இந்தியா இன்டர்வியூக்கு போன இண்டிகோ விமானிகள்.!

இண்டிகோ விமான நிறுவனத்தின் விமானிகளில் பெரும்பாலானோர் கடந்த சனிக்கிழமை ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு சென்றதால், அந்த நிறுவனத்தின் விமான சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
கொரோனாவுக்குப் பின்பு செலவுகள் அதிகரித்தால் விமானிகளுக்கான ஊதியத்தை இண்டிகோ நிறுவனம் குறைத்தது. இச்சூழ்நிலையில், ஏர் இந்தியாவை வாங்கியுள்ள டாடா நிறுவனம், புதிய விமானிகளுக்கான நேர்காணலை கடந்த சனிக்கிழமை நடத்தியது.
உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுமுறை எடுத்த இண்டிகோ விமானிகளில் பெரும்பாலோனார் டாடா நடத்திய நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இதனால், இண்டிகோ விமானத்தின் சேவை 55 சதவிகிதம் பாதிக்கப்பட்டது.
Comments