நிலத்தகராறு காரணமாக பெண்ணை உயிருடன் எரித்த 3 பேர்.!

0 1458

மத்தியப் பிரதேசம் குணா மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக பெண் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ராம் பியாரி என்ற பழங்குடி இனப் பெண் உடலில் தீ வைத்து கருகிய நிலையில் தமது வயலில் கிடந்ததாக அவர் கணவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அரசு நலத்திட்டத்தின் கீழ் ஒதுக்கித் தந்த நிலத்தை அபகரிக்க முயன்ற சிலர் இந்த கொடிய செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெண் உயிருடன் எரிக்கப்படும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.

இந்த பாதக செயலில் ஈடுபட்ட 3 பேரில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments