அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் - கர்நாடக அரசு

0 1849

சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டுமென கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயண் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments