அழிக்கால் கிராமத்தில் ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகளால் ஊருக்குள் புகுந்த கடல்நீர்!

0 1306

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழிக்கால் கிராமத்தில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது.

ஆக்ரோஷமாக சீறி வரும் அலைகளால் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அவ்வப்போது மணலை சுருட்டிக்கொண்டு அலை சென்ற நிலையில் சில வீடுகள் சிறிதளவு மண்ணுக்குள் புதைந்திருக்கின்றன.

தண்ணீர் புகுந்துள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் புகாதவாறு சிலர் வீடுகள் முன்பாக  மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments