பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.? வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை..!

பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை.? வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை..!
கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணிற்கு பல நாட்களாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படும் நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சின்ன நாயக்கனஹள்ளி கிராமத்தில் வார்டு மெம்பராக உள்ள பிரசன்ன குமார் என்பவர், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றிய பெண்ணிற்கு அலுவலகத்தில் வைத்து பாலியல் தொல்லை அளிப்பது போல் ஏராளமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீசார் பிரசன்ன குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments