முன்விரோதம் காரணமாக தொழிலதிபரை காரில் கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கும்பல் கைது.!

0 824

புதுக்கோட்டையில், முன்விரோதம் காரணமாக தொழிலதிபரை காரில் கடத்தி 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கீரானூரைச் சேர்ந்த தொழிலதிபர் சந்திரசேகரன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது அவரை ஸ்கர்பியோ காரில் கடத்திய மர்ம கும்பல், அவரது மகன் மணிகண்டனிடம் 70 லட்சம் பணம் கேட்டு மிரட்டியது.

மணிகண்டன் போலீசில் புகாரளித்த நிலையில், செல்போன் எண்களை டிராக் செய்து, போலீசார் பின் தொடருவதை அறிந்த கும்பல், சந்திரசேகரனை திருச்சியில் இறக்கிவிட்டு தப்பியது.

பின்னர், சந்திரசேகரனை மீட்ட போலீசார் கடத்தலில் தொடர்புடைய களமாவூர் கிராம நிர்வாக அலுவலர் மயில்வாகனண் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், மயில்வாகணன் சந்திரசேகரனின் வீட்டில் குடியிருந்து காலி செய்த போது, முன்வைப்பு தொகையை சந்திரசேகரன் திருப்பிக் கொடுக்காதது தொடர்பான முன்விரோதத்தால் கூட்டாளிகள் மூலம் அவரை கடத்தியது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments