அம்மா உணவகம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக புகார்.. சீரமைக்கக் கோரி சென்னை மாநகராட்சிக்கு கடிதம்!

0 603

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள  சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்த நிலையில், அதனை சீரமைக்கக் கோரி மருத்துவமனை சார்பில் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அம்மா உணவகத்தின் சமயலறைக்கு வெளியே எலி ஒன்று இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குடிநீர் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் இணையதளத்தில் சில வீடியோக்கள் வெளியாகின.

இந்நிலையில், அம்மா உணவகத்தை உடனே சுத்தம் செய்வதுடன் தொடர் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் நிலைய அலுவலர் சுப்பிரமணி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments