ரோட்டில் அடிபட்டு கிடந்தவருக்கு தக்க நேரத்தில் உதவிய ராகுல் காந்தி...
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க உதவும் வீடியோ வெளியாகி உள்ளது.
கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தவரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்க உதவும் வீடியோ வெளியாகி உள்ளது.
வயநாடு மற்றும் மலப்புரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வடபுர சாலையில் தன் காரில் சென்று கொண்டு இருந்தார்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயங்களுடன் சாலையில் கிடந்த வாகன ஓட்டியை கவனித்த ராகுல் காந்தி தன் காரை உடனே நிறுத்தி உதவினார்.
தன்னாக வந்த ஆம்புலன்ஸ்சில் வாகன ஓட்டியை ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்க ராகுல் காந்தி உதவினார். வாகன ஓட்டியை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க ராகுல் காந்தி உதவும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது.
Comments