தாம் இயக்கும் 50வது படமே கடைசி என அறிவித்தார் உடி ஆலன்

0 1230

இயக்குனர் உடி ஆலன் Woody Allen தாம் பாரீசில் இயக்கி வரும் புதிய படமே கடைசி என்று அறிவித்துள்ளார்.

86 வயதான அவர் மிகவும் அரிய ஒரு பேட்டியை ஹாலிவுட் நடிகரான அலெக் பால்ட்வினுக்கு அளித்துள்ளார். இந்தப் போட்டியில் தமது திரைப்படங்கள் மற்றும் ஜீரோ கிராவிட்டி என்ற தலைப்பில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் நூல் பற்றி பேசிய இயக்குனர் உடி ஆலன், 50வது படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து, அதுவே தமக்கு கடைசி படம் என்று கூறினார்.

தமது வளர்ப்பு மகளால் பாலியல் புகாருக்கு ஆளான உடி ஆலனும், படப்பிடிப்பில் கையில் பிடித்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்டு ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவத்தால் அலெக் பால்ட்வினும் கடும் சர்ச்சைக்கு ஆளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments