குடியிருப்புப் பகுதியில் அங்குமிங்கும் ஓடிய சிறுத்தை... மயக்க ஊசி போட்டு பிடித்த வனத்துறையினர்

0 520

மகாராஷ்ட்ராவில் உள்ள நாசிக்கில் வனவிலங்கு அதிகாரிகள் பெண் சிறுத்தையை சிறைப்பிடித்து மீட்டனர்.

நாசிக்கின் சத்புர் என்ற மக்கள் அதிகமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் புகுந்த இந்த சிறுத்தை அங்குமிங்கும் ஓடியதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க முயன்ற போது ஆர்வத்தில் கூடிய கூட்டத்தையும் கொட்டும் மழையையும் சமாளிக்க வேண்டிய நிலை இருந்தது.

மழையால் துப்பாக்கியில் மயக்க ஊசி செலுத்தி சுடும் முதல் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சித்து சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments