ரூ. 70 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்

0 788

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர்.

கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த தொழிலதிபரான சந்திரசேகரன் என்பவர் நேற்று காலை  5 மணி அளவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது 5பேர் கொண்ட கும்பல் பொலீரோ காரில் கடத்தி சென்றது. இது தொடர்பான மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்கள் மூலம் துப்பு துலக்கி கீரனூரைச் சேர்ந்த 5பேரை கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் கடத்தல் கும்பலால் சூரியூர் சாலையில் இறக்கி விடப்பட்ட சந்திரசேகரன் பத்திரமாக மீட்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments