மனைவியின் தங்கையை காரில் கடத்திச் செல்ல முயற்சி... ”ஆசை” பட பாணியில் ஒரு சம்பவம்

0 3985

விழுப்புரத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்தியவரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

சிறுமதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மனைவி  விஜயபானுவின் தங்கையான  மருத்துவர் விஜயமஞ்சுவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜயமஞ்சு நேற்று மற்றொரு அக்கா கனிஷ்காவுடன் அங்குள்ள நகைக் கடைக்கு சென்ற போது அங்கு வந்த வெங்கடேசன் காரில் கடத்தியுள்ளார். காரில் தொங்கியபடியே சென்ற கனிஷ்காவைப் பார்த்த பொதுமக்கள் விரட்டிப் பிடித்து விஜயமஞ்சுவை மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments