தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் அமரீந்தர் சிங்?

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் முடிய உள்ள நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் இறுதி வேட்பாளரை பா.ஜ.க. மேலிடம் இறுதி செய்யும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments