பாஜக தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி இன்று உரை

ஹைதராபாதில் நடைபெறும் பாஜக செயற்குழுக்கூட்டத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.மாலையில் செகந்திராபாதில் பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பாஜகவின் இரண்டுநாள் தேசிய செயற்குழுக் கூட்டம் மிஷன் சவுத் என்ற முழக்கத்துடன் ஹைதராபாதில் நேற்று தொடங்கியது. பிரதமர்மோடி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் முதலமைச்சர்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளனர்.
நேற்றையக் கூட்டத்தின் முடிவில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் அக்னிபாதை திட்டத்துக்கும் வரவேற்பு தெரிவித்து பாஜக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
ஏழைகளுக்கு அதிகாரம் என்ற பாஜகவின் இலக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக பொருளாதாரத் தீர்மானம் ஒன்றையும் கட்சி நிறைவேற்றி இருப்பதாகக் கூறினார்.வரும் ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
இன்றைய பாஜக தேசிய செயற்குழுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த உள்ள பிரதமர் மோடி மாலையில் செகந்திராபாதில் நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிரோன்கள் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் கண்காணிக்கப்படுகிறது. வாகனப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments