மட்டன் பிரியாணியில் ’கரப்பான் பூச்சி’..“5 ஸ்டார் பிரியாணி“ ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்..!

0 2777

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உணவகத்தில் வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறி ஊழியரிடம் வாடிக்கையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி டவுன் மணிகூண்டு அருகே “5 ஸ்டார் பிரியாணி“ என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு வந்த மூர்த்தி மற்றும் அவரது மனைவி, மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்த போது அதில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த உணவக நிர்வாகம், தாங்கள் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இல்லை எனவும், பொய் குற்றச்சாட்டு கூறிய மூர்த்தி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments