ஒமைக்ரானின் துணை வகைகளால் அதிகரித்து வரும் கொரோனா.. வயதானோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்..!

0 1670
ஒமைக்ரானின் துணை வகைகளால் அதிகரித்து வரும் கொரோனா.. வயதானோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்..!

ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸ்களின் பரவல் காரணமாக இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 25-ம் தேதி வரையிலான ஒருவார கால கட்டத்தில் இங்கிலாந்தில் 23 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸ்களின் பாதிப்பு 5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு உறுதியாகி இருப்பதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வடக்கு அயர்லாந்தில் 25-ல் ஒருவருக்கு அதாவது சுமார் 71 ஆயிரம் பேருக்கும், வேல்ஸில் 30-ல் ஒருவருக்கு அதாவது சுமார் 1 லட்சத்து 6 ஆயிரத்து 500 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments