5 ஆயிரம் அடி உயரத்தில் சென்ற விமானத்தின் கேபினில் புகை.. உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது..!

0 876
5 ஆயிரம் அடி உயரத்தில் சென்ற விமானத்தின் கேபினில் புகை.. உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது..!

டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குள் புகை வந்ததை அடுத்து உடனடியாக மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தை கடந்து பறந்து கொண்டிருந்தபோது, விமானி அறைக்கு பின்னால் உள்ள கேபினில் புகை வருவதை விமான ஊழியர்கள் கவனித்ததையடுத்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments