ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 292 விமானங்களை வாங்கும் சீனா.. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றம்!

0 1035

சீன விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்கும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஏமாற்றமடைந்துள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான China Southern, Air China, Shenzhen Airlines and China Eastern ஆகிய நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 37 பில்லியன் டாலர் மதிப்பில் 292 விமானங்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதனால் தங்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதும் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஏமாற்றமடைந்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் நிலவும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments