நுபுர் சர்மாவை கண்டித்த உச்சநீதிமன்றம்.. ஏன் கைது செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் விளக்கம்.!

0 2045

உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு ஆளான நுபுர் சர்மாவை கைது செய்யாதது ஏன் என்று டெல்லி போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் மனம் புண்படும் படி கட்டுப்பாடில்லாமல் பேசி நடுநிலையாளர்களை கொதிப்பில் ஆழ்த்திய நுபுர் சர்மா மிகப்பெரிய அரசியல் கட்சியின் பாதுகாப்பில் இருப்பதால் கைது செய்யப்படவில்லையா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நுபுர் சர்மாவை கைது செய்ய டெல்லிக்கு சென்ற போது நுபுர் சர்மா தலைமறைவாகிவிட்டதாக மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நுபுர் சர்மாவிடம் கடந்த மாதம் 18 ஆம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments