தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!

0 1052

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது குறித்த புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் விவரங்கள் குறித்து அந்தந்த பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுளது.

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் வரும்  6-ம்  தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments