அமர்நாத் யாத்திரீகர்களுக்கு வழிநெடுக உதவும் ராணுவம், போலீஸ்.!
அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற முதல் குழுவினருக்கு வழிநெடுக ராணுவத்தினரும் ஜம்முகாஷ்மீர் போலீசாரும் வழிகாட்டி வருவதுடன் இடர்களைக் கடக்க உதவியும் செய்து வருகின்றனர்.
பிராரி மார்க் ஒய் ஜங்சன் எனுமிடத்தில் மழையால் பாலம் மீது ஆற்றுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் அமர்நாத் யாத்ரீகர்கள் அப்பாலத்தைக் கடக்க ஜம்மு காஷ்மீரிர் போலீசின் மீட்புக் குழுவினர் கயிறு கட்டி ஒவ்வரருவராக பாலத்தை பத்திரமாக கடந்து செல்ல உதவி செய்தனர்.
இதனிடையே குஞ்சுவாணி சதுக்கம் பகுதியில் அமர்நாத் யாத்ரீகர்களுக்காக சிறப்பான லங்கர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
Comments