குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகை.!

0 1013

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு கேட்க இன்று சென்னை வருகிறார்.

கடந்த மாதம் 25 ஆம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் அவர் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.அதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளின் ஆதரவை நாடி அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று சென்னையிலும் அதைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் அவர் ஆதரவைத் திரட்டுவார். சென்னையில் அதிமுக நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்தும் தமது ஆதரவைக் கோர உள்ளார் திரௌபதி.

முன்னதாக பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிரோண்மணி அகாலி தளம் கட்சி திரௌபதிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments