ரோந்து பணியில் இருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்கள்.. காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

0 1062
ரோந்து பணியில் இருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய இளைஞர்கள்.. காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், இரவு நேர ரோந்து பணியில் இருந்த காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடிய 3 பேரை, சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

அவிநாசி காவல் நிலைய காவலர்கள் அவிநாசி - முத்துச்செட்டிபாளையம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக பதிவு எண் இல்லாத ஒரு பைக்கில் வந்த 3 பேரை நிறுத்த முயன்ற போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

அவர்களை காவலர்கள் விரட்டி பிடித்த போது பைக்கில் இருந்த ஒருவன் காவலர் அருள்குமாரை இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில், 3 பேரும் தப்பி சென்றனர்.

இதில் காயமடைந்த காவலர் அருள்குமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments