தனியாக வசித்து வந்த தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் கொள்ளை..! 140 சவரன் நகை, ரூ.10 லட்சம் திருட்டு

0 1295

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே முதிய தம்பதியை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த 140 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவுடையானூர் சிதம்பர நாடார் தெருவில் ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதிகளான அருணாச்சலம் மற்றும் ஜாய் சொர்ண தேவி தனியாக வசித்து வரும் நிலையில், நேற்றிரவு அவர்களது வீட்டிற்குள் புகுந்த மங்கி குல்லா அணிந்திருந்த 3 மர்ம நபர்கள், ஜாய் சொர்ண தேவியையும், டிவி பார்த்து கொண்டிருந்த அருணாச்சலத்தையும் தாக்கி ஒரே அறையில் கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது.

பணி முடித்து பெற்றோரை பார்க்க வந்த அருணாச்சலத்தின் மகள் ராணி, இருவரும் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய தென்காசி மாவட்ட எஸ்.பி., கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments