பைக்கில் சென்ற நபர் பள்ளத்தால் நிலைத்தடுமாறி விழுந்த போது லாரி ஏறி இறங்கி பலி
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்த நபர் சாலையில் இருந்த பள்ளம் காரணமாக நிலைத்தடுமாறி விழுந்த நேரத்தில், லாரி மோதி உயிரிழந்த விபத்தின் சிசிடிவிக் காட்சி வெளியாகியுள்ளது.
முடிச்சூர் சாலை லட்சுமிபுரம் சந்திப்பில் தாம்பரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வலதுபுறம் வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி, ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார், டிப்பர் லாரி ஓட்டுநரை கைது செய்தனர். விசாரணையில் விபத்தில் உயிரிழந்தது, சென்னை தியாகராயநகரை சேர்ந்த சாமிவேல் என்பது தெரியவந்தது.
Comments