அடுக்குமாடி குடியிருப்பின் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல்; 17 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

0 592

உக்ரைனின் துறைமுக நகரமான ஒடேசாவில் ஒன்பது அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக ஒடேசா பிராந்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பெல்கோரோட் - டினீஸ்டர் கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் உருக்குலைந்து போனது.

இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கருங்கடலில் உள்ள பாம்புத் தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய மறுநாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments