தையல்கலைஞரைக் கொன்ற 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்

0 3729

உதய்பூரில் தையல்கலைஞர் தலையை வெட்டி படுகொலை செய்த இரண்டு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அஜ்மீர் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான இருவரின் செல்போன்களையும் அதில் உள்ள பாகிஸ்தான் தொடர்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு மற்றும் அலட்சியத்தால் தையல்கடைக்கார் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் இதே போல் கொலை மிரட்டலுக்கு ஆளான மற்றொரு இந்து நபருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments