மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகம் மீது வெடிகுண்டு வீசிய மர்ம நபர்.. சிசிடிவி காட்சி வெளியீடு.!

0 815

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

ஏகேஜி சென்டரில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமையகத்திற்கு நள்ளிரவில் மோட்டார்சைக்கிளில் வந்த நபர் ஒருவர் வெடிகுண்டை எடுத்து வீசி விட்டு வேகமாக சென்று விட்டார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிசிடிவி உதவியுடன் வெடிகுண்டு வீசிய நபரை தேடி வருகின்றனர். இதற்கிடையில் வெடிகுண்டு வீச்சு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments