கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பல் கைது..!

0 1146

சென்னையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் போதை மாத்திரை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில், காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தாம்பரம் சுற்றுப்பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, தனிப்படை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது, பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த பைசல், ஜகருல்லா, உதயசீலன் ஆகிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், 600-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போதை ஊசி சிரிஞ்சிகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments