6 வயது சிறுமியையும், தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 பேர் கைது.!

0 2177

உத்தரகாண்ட் மாநிலம் ஹரிதுவாரில், 6 வயது சிறுமியையும் அவள் தாயையும் காரில் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த 5 கொடியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூன் 25 ஆம் தேதி தாயும் மகளும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் பாலியல் வன்முறைக்கு ஆளானதை மருத்துவப் பரிசோதனை உறுதி செய்தது. மன நலம் பாதிக்கப்பட்டதால் தாயால் வாக்குமூலம் தர இயலவில்லை.

காவல்துறையினர் மின்னணு சாதனங்கள் ,கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும் 150  பேரிடம் விசாரணை நடத்தியும் குற்றம் செய்தவர்களை சுற்றி வளைத்தனர்.குற்றத்துக்குப் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments