மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்வு... 60க்கும் மேற்பட்டோர் மாயமானதால் தேடும் பணி தீவிரம்..!

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் மாயமானதால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துபுல் ரயில் நிலையம் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஏராளமான பாறைகளும்-மண்ணும் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால், அப்பகுதியில் இருந்த பலரும் நிலச்சரிவில் சிக்கினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Comments