காணாமல் போன மளிகை வியாபாரி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!

0 2832

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காணாமல் போன மளிகை கடை வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செம்மணங்கூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் -வசந்தகுமாரி தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வசந்தகுமாரிக்கு அங்கிருந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் அடிக்கடி வசந்தகுமாரியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து சந்தோஷ்குமாரை காணாததால் உறவினர்கள் பல இடங்களில் தேடிய பிறகு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று மாலை உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் ஆற்றில் ஆண் சடலமொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய போது அது காணாமல் போன சந்தோஷ்குமார் என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த ஒரு மாதமாக அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்ற வசந்தகுமாரியின் ஆண் நண்பர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனால் இவர்களுக்குள் ஏதேனும் தகராறு ஏற்பட்டு அதில் சந்தோஷ்குமாரை வசந்தகுமாரியும் அவரது ஆண் நண்பரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வசந்தகுமாரி மற்றும் அவரது ஆண் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments