தலையில்லா சடலத்தை எடுத்துச்சென்று நடனம் ஆடி அடக்கம் செய்த உறவினர்கள்..!

0 4013

சென்னை ராயபுரத்தில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் தலை கிடைக்காத நிலையில் மரபணு சோதனை செய்து 2 மாதங்களுக்கு பின்னர் தலையற்ற சடலத்தின் பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

சென்னை மணலி வினாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்ரபாணி, திருவொற்றியூர் 7வார்டு திமுக வட்ட பிரதிநிதியாக இருந்து வந்த இவரை காதலி தமீம் பானுவும் , அவரது சகோதர் வாஷிம் பாஷாவும் சேர்ந்து கொலை செய்து உடல்பாகங்களை துண்டு துண்டாக்கியதாக கைது செய்யப்பட்டனர். அடையாறு ஆற்றில் துண்டாக்கி வீசப்பட்ட தலையை தேடி வந்தனர்.

கடந்த மே மாதம் முதல் தேடியும் தலைகிடைக்காத நிலையில், இரண்டு மாதங்களாக துண்டுகளாக்கப்பட்ட உடல் பாகங்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன.

உடல் பாகங்களை , சக்கரபாணி மகனின் டி என் ஏ வுடன் ஒப்பிட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட அந்த சடலத்தின் துண்டுகள் சக்கரபாணி உடையது தான் என்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த உடல் பாகங்களை மகன் நாகேந்திரனிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

திருவொற்றியூர் இந்திரா நகர் கரிமேடு பகுதியில் உறவினர் வீட்டு முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை சுற்றி அவரது உறவினர்களில் சிலர் கதறி அழுது கொண்டிருக்க வெளியில் மேளம் இசைக்கு ஏற்ப பெண்கள் சிலர் நடனம் ஆடி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

சவப்பெட்டியின் மீதும் அதன் அருகிலும் கொல்லப்பட்ட சக்கரப்பாணியின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. டிரம் செட்கள் இசைக்க இறுதி ஊர்வலம் நடந்தது

அஞ்சலிக்கு பின்னர் மேளதளங்களுடன் சொந்த ஊரான, திருத்தணி அடுத்த பங்களா மேடு பகுதிக்கு சக்ரபாணியின் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments